“கடவுளே இப்படியா நடக்கணும்…?” வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நாய்க்குட்டி…! துணிச்சலாக காப்பாற்றி உயிரை விட்ட 13 வயது சிறுவன்…. கண்ணீரில் மூழ்கிய பெற்றோர்….!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக, 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கிப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த இயற்கைச் சீற்றத்தினால் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அசாமின் நசீரா பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த ஹ்ரிதி என்ற 13 வயதுச் சிறுவன், தான் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு பதறியடித்துப் பாய்ந்துள்ளான்.

ஆபத்தான சூழ்நிலையிலும் துணிச்சலாகச் செயல்பட்டுத் தான் வளர்த்த செல்லப் பிராணியை வெள்ளத்திலிருந்து பத்திரமாகக் காப்பாற்றிய அந்த சிறுவன், துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தான். வெள்ளப் பெருக்கில் ஏற்கனவே தங்களது உடமைகளை இழந்து பரிதவித்து வந்த பெற்றோர், தற்போது தங்களின் ஒரே மகனையும் இழந்து கண்ணீரில் மூழ்கியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.