சீனாவில் மூளை வளர்ச்சி தொடர்பான அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு, நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் புதிய ஜீன் எடிட்டிங் சோதனை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காகச் சிறுமியின் பெற்றோரிடம் இருந்து ரூ. 6.7 கோடிக்கும் மேல் பணம் பெறப்பட்டு, தண்டுவடம் வழியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்திற்குப் பிறகும், அந்நரம்பியல் நிபுணர் ‘நேச்சர்’ அறிவியல் இதழில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் சிறுமி உயிரிழந்த தகவலை மறைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகிச்சையின் போது ஏற்படும் அபாயங்கள் குறித்துப் பெற்றோருக்குச் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி சிறப்புக் குழு அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது
