வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மேலும் நகர்ந்து நாளை வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகள் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ள நிலையில், இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, தற்போது ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் பல இடங்களில் மழை நீடித்து வரும் சூழலில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
