“விஜய்க்கு செம ஷாக்”…. 10 நாளில் வந்தவர்களுக்கு பதவி… தவெகவில் இருந்து கூண்டோடு விலகல்… திமுகவில் ஐக்கியம்….!

By Nanthini on ஆடி 26, 2026

Spread the love

பிற கட்சிகளிலிருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய ஆர்வம் காட்டி வரும் வேளையில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் திடீரென திமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்ட அவர்கள், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “10 நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த புதியவர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே உழைக்கும் எங்களைப் போன்றவர்களைக் கண்டுகொள்வதில்லை” எனத் தங்களது ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு தவெகவின் உட்கட்சி நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகிகளின் மனக்குறைகள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.