“அவங்களை உடனே கூப்பிடுங்க…. மீண்டும் திமுகவில்”….. கடைசி நிமிடத்தில் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு… 150 பேருக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்….!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

திமுகவில் ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமைப் பேச்சாளர்கள் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைய வாய்ப்பு உருவாகியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுக்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் உட்பட எந்தக் கட்சியிலும் சேராமல், கட்சிக்கு விசுவாசமாக மன்னிப்புக் கடிதத்துடன் காத்திருக்கும் சுமார் 150 பேரின் நிலை குறித்து மூத்த நிர்வாகிகள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அவர்களின் விசுவாசத்தையும், தேர்தல் களப்பணிகளையும் கருத்தில் கொண்டு, நீக்கப்பட்டவர்களை மீண்டும் திமுகவில் இணைக்க ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் அவர்கள் மீண்டும் கட்சியில் முறைப்படி சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.