நீட் போராட்டம் நியாயமானது… “நான் மாணவர்களுடன் நிற்கிறேன்…” அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க… கொந்தளித்த பிரபல நடிகை … அதிர்ச்சியில் ஹோலிவுட்…!

By Visaka on ஆடி 25, 2026

Spread the love

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் அமைப்பு இணைந்து முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் ஒன்றுதிரண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சூழலில், இப்போராட்டத்திற்கு பிரபல நடிகை ஜோதிகா தனது முழு ஆதரவைத் வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்களின் உரிமைகளுக்காகவும், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் குரல் கொடுத்துள்ள ஜோதிகா, “நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் நிற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்போராட்டத்தை முன்னெடுத்துவரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் Gen Z இளைஞர்களின் துணிச்சலான செயல்பாடுகளைப் பாராட்டியுள்ள அவர், “ஒரு தாயாக, எங்கள் பிள்ளைகளும் உங்களைப் போல அச்சமின்றியும், நேர்மையாகவும் வளர வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

   

ஒன்றாக இணைந்து ‘நாம்’ தான் இந்தியா என்பதை இந்த இளைஞர்கள் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜோதிகாவின் இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியில், திரைப்பிரபலங்கள் பலரும் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.