பாட்டியின் இறுதி சடங்கில் சோகம்…! எரியும் சிதைவில் குதித்த பேரன்… அடுத்த சில நொடிகளில்…. பதறிய பொதுமக்கள்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 25, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் பாட்டியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரெனப் பரிதவிப்பு தாங்காமல் 30 வயது நபர் ஒருவர் எரியும் மின்மயான தகன மேடைக்குள் குதித்தார். அங்கு கூடியிருந்த உறவினர்களும் பொதுமக்களும் இதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.

உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட மயான ஊழியர்களும் அங்கிருந்தவர்களும் துணிச்சலுடன் செயல்பட்டுச் சில விநாடிகளுக்குள் அவரைத் தீயிலிருந்து மீட்டனர். இதனால் அவரது உயிர் தப்பியதுடன், பலத்த தீக்காயங்களுடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாட்டியின் இழப்பைத் தாங்க முடியாமல் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.