ISIS வலையில் தமிழக இளைஞர்கள்…. ‘சிமி’ அமைப்பின் அதிர்ச்சி ஊடுருவலை கண்டுபிடித்த NIA… பின்னணியில் காத்திருக்கும் பேரதிர்ச்சி…!

By Nanthini on ஆடி 24, 2026

Spread the love

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட ‘சிமி’ (SIMI) பயங்கரவாத அமைப்பு மீண்டும் இரகசியமாகத் தலைதூக்கியுள்ளதாக வெளியான அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை தனது அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இளைஞர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தி ஆள் சேர்க்கும் விவகாரம் குறித்துச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போது, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கும் சில முக்கிய அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகளுக்குள் சிமி அமைப்பின் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பது அம்பலமானது.

இந்த ஊடுருவலின் பின்னணியில் உள்ள நபர்களையும் அவர்களின் சதித்திட்டங்களையும் கண்டறியும் நோக்கில், என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்போது மதுரை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய மாவட்டங்களில் நேரில் முகாமமிட்டு, தொடர் சோதனைகளையும் விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.