நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தக்கூடும் என்ற சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலைமையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கல்லூரிக்கு வெளியே திரண்டிருந்த மாணவர்களை காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்து அழைத்துச் சென்றதால், அப்பகுதியில் கடுமையான பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
