தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சட்டமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 நிதியுதவி போன்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய வாக்குறுதிகள் வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெறாவிட்டால், அதுகுறித்து பேரவையில் உறுதியாகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
