கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாதசாரிகள் நடக்கும் நடைபாதைக்குள் எதிர்பாராதவிதமாகப் பாய்ந்தது. இந்த கொடூர சம்பவத்தில், அங்கிருந்த நபர்கள் மீது வாகனம் ஏறியதில் டக்கே கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் (30) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதறவைக்கும் இந்த விபத்தின் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இது தொடர்பாகச் சித்ரஹள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
