“எம்.ஜி.ஆர், ஜெ. இயக்கத்தை தொட நினைச்சா”… தவெக-வுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த ஓப்பன் வார்னிங்…. பரபரக்கும் அரசியல் களம்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

அதிமுகவை அழித்து விடலாம் என தமிழக வெற்றிக் கழகம் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதய தெய்வம் ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று உறுதியளித்தார்.

மேலும், சுயநலத்திற்காக அதிமுகவிலிருந்து சில தலைவர்கள் வேண்டுமானால் ஓடலாமே தவிர, உண்மையான தொண்டர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள் என்றும், கட்சியைப் பலப்படுத்த யாரை ஒழித்தால் நல்லது என்பது தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக, தமிழகத்தின் அடித்தளமாக விளங்கும் திராவிட இயக்கங்களை யாராலும் எக்காலத்திலும் அசைக்க முடியாது என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பேச்சில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.