ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் நயமாகப் பேசி பழக முயன்ற வாலிபர், ஒரு கட்டத்தில் மாணவியின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்து அவரிடம் நெருங்கப் பார்த்துள்ளார்.
இந்நிலையில், ஒரு நாள் வாலிபர் அந்த மாணவியைத் தனியாகச் சந்தித்தபோது, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மாணவி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மாணவியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இந்த கொலை மிரட்டலுக்குப் பயந்த மாணவியை, வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த அதிர்ச்சியான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி, மிகுந்த மனவேதனையுடன் தனது பெற்றோரிடம் விபரத்தைக் கூறியுள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பதிவு செய்த போலீசார், கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
