BREAKING: வங்கி கடன்…. ரூ.4.5 லட்சம் டூ ரூ.7.5 லட்சம்…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கடன் வரம்பை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தி அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மாணவர்களுக்கு, மொத்தம் ரூ.3,000 கோடி மதிப்பிலான கல்விக்கடனை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி இந்த கடனுதவியைப் பெறுவதற்கு ஏதுவாக, மாவட்ட வாரியாக பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை வழிகாட்டி அதிகாரிகளாக நியமிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த புதிய முன்னெடுப்பு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பல லட்சம் மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குவதுடன், மாநிலத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தையும் கணிசமாக உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.