பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை?…. CM விஜய் வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு…. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தொடரில், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு கவர்ச்சிகரமான மற்றும் முக்கிய வாக்குறுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனப் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக, ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் திருமணத்திற்கு ‘1 சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை’ வழங்கும் திட்டம் மற்றும் குடும்பத் தலைவிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தும் அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று ஒட்டுமொத்த மகளிரும் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.