“20 அதிகாரிகள் அவுட்”… ஒரே இரவில் மாற்றப்பட்ட முக்கிய துறைகள்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான புதிய நியமனங்கள் குறித்த அரசாணையை தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த முக்கிய மாற்றத்தின்படி, தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சிறு மற்றும் குறு தொழில் துறையில் இருந்த அதுல் ஆனந்த், தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், உயர்கல்வித்துறை செயலாளராக தீரஜ்குமார், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக காகர்லா உஷா மற்றும் பொதுத்துறை செயலாளராக சுந்தரவல்லி ஆகியோர் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

இடமாற்றப் பட்டியலில் மற்றுமொரு முக்கிய அங்கமாக, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனின் முன்னாள் எம்.டி உமாநாத் தமிழ்நாடு தொழில் துறை ஆணையராகவும், சி.ஜி.தாமஸ் வைத்தியன் தொழில்துறையின் முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறையில் இருந்த வள்ளலார் தொழிலாளர் நலத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையராக சுப்ரியா சாகு, அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்துறை தலைவராக அருண்ராய் மற்றும் போக்குவரத்து துறை செயலாளராக நிர்மல் ராஜ் உள்ளிட்ட 20 உயர் அதிகாரிகள் வெவ்வேறு முக்கிய துறைகளுக்கு மாற்றப்பட்டு, நிர்வாக ரீதியிலான புதிய பொறுப்புகளில் உடனடியாக அமர்த்தப்பட்டுள்ளனர்.