மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மின்னல் வேகத்தில் விநியோகம் செய்து வரும் ஸ்விக்கியின் ‘இன்ஸ்டாமார்ட்’ தளம், தற்போது எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விற்பனையிலும் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. இதற்காக ஹெச்.பி.சி.எல் (HPCL) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஸ்விக்கி, வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்காக 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை இனி நேரடியாக வீட்டிற்கே டெலிவரி செய்யவுள்ளது.
வழக்கமான சிலிண்டர் முன்பதிவு முறைகளில் இருக்கும் காலதாமதத்தைத் தவிர்த்து, சில நிமிடங்களிலேயே சிலிண்டர்களைப் பெற வழிவகை செய்யும் இப்புதுமையான சேவை, முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
