“முதலமைச்சர் விஜய் சாரை சந்தித்தது பெரும் கௌரவம்…!” – நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்…! இணையத்தைக் கலக்கும் வைரல் போட்டோஸ்…!!

By Swetha on ஆடி 16, 2026

Spread the love

நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களை, திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சந்திப்புகளின் புகைப்படங்கள் தினந்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இன்று முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகராக இருந்து நாட்டை ஆள்பவராக… சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் சாரை நேரில் சந்தித்தது எனக்கு கிடைத்த பெரும் கௌரவம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

மேலும், தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல், விஜய் விருதுகள் மேடை, ‘கோட்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தது வரை கடந்து வந்த பாதையைத் தொடர்ந்து, இப்போது முதலமைச்சராக அவரைச் சந்திக்கும் இந்தத் தருணம் எப்போதும் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்த சகோதரத்துவமும் பிணைப்பும் என்றும் தொடரும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இவர்களது சந்திப்பின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.