ஏழை எளிய மக்களுக்கு CM விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி… தரம் குறைந்தால் நடவடிக்கை… ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!

By Visaka on ஆடி 13, 2026

Spread the love

சென்னை பெரம்பூர் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த விழாவின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் விடுபட்ட தகுதியான மக்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தையும் அவர் முன்னெடுத்துத் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, புதிய பயனாளர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருள்களைத் தன் கரங்களால் வழங்கிய முதலமைச்சர், அங்குள்ள நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்துக் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த அதிரடித் தொடக்கத்தைத் தொடர்ந்து, முதற்கட்டமாகத் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 73,000 பயனாளிகளுக்குப் புதிய ரேஷன் கார்டுகள் மிக விரைவில் தடையின்றி வழங்கப்பட உள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.