திடீர் திருப்பம்… திமுக – பாஜக கூட்டணி?… அனிதா ராதாகிருஷ்ணன் கொளுத்திப் போட்ட வெடி…. அடுத்த 6 மாதங்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

அனிதா ராதாகிருஷ்ணனின் சமீபத்திய பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு திமுக – பாஜக கூட்டணி உருவாகலாம் என்ற புதிய யூகங்களையும் கிளப்பியுள்ளது. அடுத்த 6 மாதங்களில் திருச்சி சிவா டெல்லியில் அமைச்சராவார் என்று அவர் குறிப்பிட்டிருப்பது இந்த விவாதத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, தனது முக்கியத் திட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு கூடுதல் எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் ஒரு சூழலில் உள்ளது. இந்த அரசியல் சூழலைச் சாதகமாக்கி, திமுக மத்திய அரசுக்கு ஆதரவளித்தால் அதற்குப் பிரதிபலனாக மத்திய அமைச்சரவையில் திமுகவிற்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடும் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே அனிதா ராதாகிருஷ்ணன் இவ்வாறு பேசியிருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.