நர்சிங் மாணவி படுகொலை… கனவுகளோடு வந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்… கதறும் பெற்றோர்… சிசிடிவி காட்சிகளால் அதிர்ந்த போலீஸ்…!

By Visaka on ஆடி 12, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள வாடகை அறையில் 19 வயது நர்சிங் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெமேதரா மாவட்டத்தின் கும்ஹி கிராமத்தைச் சேர்ந்த குஷி சாஹு என்ற அந்த மாணவி, தனது கல்வி மற்றும் சிறந்த எதிர்காலக் கனவுகளுடன் கடந்த 15-20 நாட்களுக்கு முன்புதான் பிலாய்க்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்துக்கொண்டே, தனது படிப்பிற்கான செலவிற்காக வைஷாலி நகரிலுள்ள ‘பிரண்ட்ஸ் கஃபே’ என்ற உணவகத்திலும் பகுதிநேரமாக வேலை செய்து வந்துள்ளார். ராம்நகரில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த இவருடன், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் அவரது கிராமத்தைச் சேர்ந்த தோழி ஒருவரும் வந்து தங்கத் தொடங்கியுள்ளார்.

https://twitter.com/HateDetectors/status/2075951998629806309/photo/1

   

சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை அன்று குஷியின் தோழி குளியலறைக்குச் சென்றிருந்த நேரத்தில், அறைக்குள் புகுந்த மர்ம நபர் குஷியை கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார். அவரது வயிறு, முதுகு மற்றும் கைகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த குஷியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழி, உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுபேலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குஷியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் பலரிடம் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை வலைவீசித் தேடி வருகின்றனர்.