திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை வெடித்துள்ளது. தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் தொடர்புடைய நபர்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் தன்னிடம் பேசியதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக ஒரு தொலைபேசி ஆடியோ பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அரசியல் களம் சூடாக இருக்கும் வேளையில், தற்போதைய இந்த மிரட்டல் புகாரும் ஆடியோ ஆதாரமும் ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிரான குதிரை பேர வழக்கில் கூடுதல் சிக்கலையும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
