ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாகத் தவறு செய்யும் என்றும், எனவே நிர்வாகிகள் ஓராண்டு காலம் பொறுமையாக இருக்குமாறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினரிடம் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தவெகவில் புதிதாக இணைந்தவர்களுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாத ஒரு சூழல் விரைவில் உருவாகும் என்றும், அந்த அதிருப்தியின் காரணமாக அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்பி வருவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசியல் நகர்வுகளைக் உன்னிப்பாகக் கவனித்து, தொண்டர்களை அரவணைத்துச் செல்லுமாறு நிர்வாகிகளை அவர் சமாதானப்படுத்தியிருப்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
