பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், பயணம் முழுவதும் தாம் அடைந்த அச்சம் குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அருகில் இருந்த ஆண்கள் தமக்குத் தேவையில்லாத உடல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாகக் கண்ணீருடன் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில் பயணத்தின்போது அங்கிருந்த மற்ற பயணிகளோ அல்லது ரயில்வே ஊழியர்களோ தமக்கு உதவ முன்வரவில்லை என்றும், இதனால் ஒட்டுமொத்த பயணமும் தமக்கு மிகுந்த பாதுகாப்பற்ற உணர்வைத் தந்ததாகவும் அந்தப் பெண் ஆதங்கப்பட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொதுப் போக்குவரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனை அளிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DaU0EIwJag_/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ரயில்வே காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
