BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆளுநரைச் சந்தித்த பிறகு அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இந்த பேரம் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் மற்றும் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் ஆகியோரை குறிவைத்து இந்த வலை வீசப்பட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், தங்களது கட்சியில் இணைந்தால் ஆஸ்டினுக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய இடம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.