BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக லுக் அவுட் (Look Out) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளனர். ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள காவல் துறையினர், இந்த சம்மன் மூலம் இருவரையும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதால் தமிழக அரசியலில் தற்போதைய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.