‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
குக் வித் கோமாளி 3 வது சீசனின் டைட்டிலை வென்றவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். இந்த நிகழ்ச்சியில் இவர் கோமாளிகளுடன் இணைந்து செய்யும் சேட்டைகள் ஏராளம். இதனால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும் ஆவார்.
2002-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிகா.
இவர் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகனும் உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…