இதை திறமை என்பதா..? இல்லை பைத்தியக்காரத்தனம் என்பதா..? கிணற்றுக்கு நடுவே உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ்.. பார்த்தாலே கண்ணை கட்டுதே சாமி…!

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், வாலிபர் ஒருவர் ஆழமான கிணற்றின் நடுவே பொருத்தப்பட்டுள்ள ஒரு குச்சியின் உதவியுடன் ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுகிறார். எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, முழு நம்பிக்கையுடன் அந்த குச்சியின் மீது ஏறி நின்று, பின்னர் மெதுவாக கீழே தொங்குகிறார். அவரது இந்த துணிச்சலான செயல் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.

இந்த சாகசத்தின் உச்சகட்டமாக, அந்த வாலிபர் குச்சியின் மறுமுனைக்குச் சென்று, வெறும் ஒரே ஒரு கையை மட்டும் பிடித்துக்கொண்டு காற்றில் தொங்குகிறார். மேலும், அந்த நிலையில் இருந்துகொண்டே காற்றில் தியானம் செய்வது போல தனது உடலை வளைத்து சமநிலைப்படுத்துகிறார். சிறிதளவு பிடி நழுவினாலும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தபோதிலும், அவர் அசத்தலாக இந்த வித்தையைச் செய்கிறார்.

   

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் இதற்குப் பலதரப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது அபாரமான உடல் சமநிலை மற்றும் திறமையைப் பாராட்டி வரும் வேளையில், இன்னும் சிலரோ இது போன்ற உயிருக்கே ஆபத்தான சாகசங்களைச் செய்வது வெறும் ‘ரீல்ஸ்’ மோகம் அல்லது பைத்தியக்காரத்தனம் என்றும், இதுபோன்ற ஆபத்தான காரியங்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.