“திமுகவுடன் ரகசிய கூட்டணி?”… EPS-க்கு எதிராக போர்க்கொடி.. பரபரப்பு கடிதம்… அதிமுக முக்கிய புள்ளிகள் உடைத்த ரகசியம்…!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பொறுப்பு விலகல் கடிதத்தில் பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அத்தலைவர்கள், திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க முடிவெடுத்த காரணத்தினாலேயே தாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தைஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஏற்கனவே எட்டப்பட்ட சமரச உடன்படிக்கையின்படி தங்களுக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை கழக பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்னர் ஜா அணி, ஜெ அணி என இரு பிரிவுகளாகப் பிரிந்து பின்னர் மீண்டும் இணைந்தபோது பழைய பொறுப்புகள் திரும்ப வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள தலைவர்கள், தற்போதும் அதே போன்றதொரு முடிவை எடுக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.