பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான ஹனீஃப் என்ற தொழிலதிபருக்கும், 20 வயதான சுமையா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆன நாள் முதலே தினந்தோறும் வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டு வந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்களுக்குள் வழக்கத்தை விட மிகப் பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சுமையா, பழிவாங்கத் துணிந்தார். அன்றைய தினம் நள்ளிரவில் ஹனீஃப் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, சுமையா கூர்மையான ஆயுதத்தால் அவரது பிறப்றுப்பை கொடூரமாகத் துண்டித்துள்ளார். வலியால் அலறிய துடித்த ஹனீஃபின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
https://twitter.com/sirajnoorani/status/2071692358291501120/video/1
இந்தக் கொடூரச் செயலைச் செய்துவிட்டு தப்பியோட முயன்ற சுமையாவை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் பொதுமக்களும் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹனீஃபைக் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட உறுப்பை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளனர். அன்றாடக் குடும்பப் பூசல்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற கோபத்தின் காரணமாக, ஒரு இளம் பெண்ணே தனது கணவனுக்கு இத்தகைய கொடூரமான தண்டனையை வழங்கிய இந்தச் சம்பவம் பங்களாதேஷ் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
