“அது எப்படி நடக்குது”?…. புதிய சர்ச்சையில் சிக்கிய முதல்வர் விஜய்…. ஆர்.எஸ். பாரதி கொடுத்த ஷாக் கம்ப்ளைன்ட்…. அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

அமைச்சரவை மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிஜிபி அலுவலகத்தில் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழக அரசின் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இத்தகைய ரகசியக் கூட்டங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும் என்றும், இதனால் அரசு சார்ந்த முக்கிய ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளதாகவும் அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போதைய முதல்வர் விஜய்யை ஒரு புதிய அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.