“தன் மகனுக்காக பாக்கியராஜ் எழுதிய கடைசி கடிதம்”… இப்படி ஒரு விஷயத்தை சொல்லிருக்காரே?… கலங்கும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம்…!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த கோலிவுட்டையும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பால் அவர் காலமான சோகத்தில் இருந்து சினிமா உலகம் இன்னும் மீளாத நிலையில், தற்போது அவரது அதிகாரபூர்வ லெட்டர் பேடில், அவரது சொந்த கையெழுத்துடன் வெளியாகியுள்ள இரண்டு பக்க உருக்கமான இறுதிக் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. ரசிகர்களுக்கு அவர் எழுதியுள்ள இந்த இறுதி அறிக்கை, பிரிவின் துயரிலும் ஒரு தத்துவார்த்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில், “சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது” என்ற தனது புகழ்பெற்ற வரிகளைக் குறிப்பிட்டுத் தொடங்கியுள்ளார் பாக்யராஜ். “என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன். அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக!” என்று தனது கண்தானம் குறித்த விபரத்தை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். மேலும், “இனி நான் கண்தானம் செய்தவர்களின் விழி வழியே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைத்தட்டல் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்” என்று தனது மகனின் எதிர்காலத்திற்காக ரசிகர்களிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

   

“வரும் போதே குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரக பிரவேசம் செய்துவிடும். எஞ்சியவது கொஞ்சமாய் அஸ்தியும், மிகுமஞ்சிய அன்பே ஆஸ்தியாயும்…” எனத் தனது டிரேட்மார்க் பாணியில் தத்துவங்களை அள்ளித் தெளித்துள்ள பாக்யராஜ், தனது இறுதி யாத்திரையில் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “நன்றி சொல்வது மனித இயல்பு, நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான்…. நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்!” என்று முத்தாய்ப்பாக அவர் எழுதியுள்ள வரிகள், அவர் உடலால் மறைந்தாலும் தமிழ் சினிமாவின் நல்ல படைப்புகளின் வழியே என்றும் வாழ்வார் என்பதை உணர்த்தி கோலிவுட்டை கண்ணீரில் நனையச் செய்துள்ளது.