“அதிமுகவில் அடுத்த வெடி”… EPS-க்கு ஷாக் கொடுக்கப்போகும் வேலுமணி, தங்கமணி… எடப்பாடிக்கு கடிதம் எழுதத் துணியும் அதிமுக ‘டாப் த்ரீ’ தலைவர்கள்….!

By Nanthini on ஆனி 30, 2026

Spread the love

அதிமுகவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கட்சிப் பொறுப்புகள், அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் பெயரளவில் உயர்ந்ததாகக் காட்டப்பட்டாலும், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமோ அல்லது நிர்வாகச் செல்வாக்கோ இல்லாத வெறும் ‘அலங்காரப் பதவிகள்’ மட்டுமே என்ற ஆதங்கம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்று எடப்பாடி பழனிசாமிக்குஅவர்கள் கடிதம் எழுதத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல்வேறு உட்கட்சிப் பூசல்களால் தவித்து வரும் அதிமுகவிற்குள், இந்த மூத்த நிர்வாகிகளின் திடீர் விலகல் முடிவு உட்கட்சி அதிருப்தி அலையை மேலும் தீவிரமாக்கி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.