திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு.? தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன டிக்கெட் விலை உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்குத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் பரிசீலனைக்குப் பிறகு, மக்களிடம் வெறும் கருத்து மட்டுமே கேட்கப்பட்டதே தவிர, கட்டணங்கள் எதுவும் இதுவரை உயர்த்தப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களின் முடிவை மீறி தவெக அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்காது என்றும், மக்கள் கூறுவதற்கேற்பவே அரசு செயல்படும் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இத்துடன், தமிழக மின்சாரத் துறையில் உள்ள 50 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், இந்த ஆண்டிற்குள் 15,000 பேரை நியமிப்பதற்கான ஒப்புதலில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டுள்ளதாக மற்றுமொரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

   

இத்துறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்