அடடா இப்படியொரு மனுஷனா..? மேடையை விட்டு கீழே இறங்கி வந்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணி ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மின்சாரத்துறை விழாவில், 383 உதவிப் பொறியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது, மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர், பணி ஆணை பெற வந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் இருப்பதைக் கவனித்தார். உடனே, அவர் மேடையில் இருந்து திடீரென கீழே இறங்கி வந்து, அந்தப் பெண்ணின் அருகே சென்று நெகிழ்ச்சியோடு பணி நியமன ஆணையை வழங்கினார்.

https://twitter.com/News18TamilNadu/status/2069647130088853980/video/1

   

முதலமைச்சரின் இந்த எதிர்பாராத மற்றும் கனிவான செயலால் அந்தப் பெண்ணும், அங்கு கூடியிருந்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். மின்சாரத்துறை விழாவில் முதலமைச்சர் விஜய் மனிதநேயத்தோடு நடந்துகொண்ட இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்த வீடியோக்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகி வருகின்றன.