திமுக இலக்கிய அணித் தலைவராக இருக்கும் அன்வர் ராஜா, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதற்குத் தூது விட்டு வருவதாகத் தனியார் இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் எம்பி மற்றும் எம்எல்ஏவாகப் பதவி வகித்துவிட்டு, கடந்த ஆண்டுதான் அவர் திமுகவில் இணைந்தார் என்பதும், அதற்கு முன்னரே வக்ஃபு வாரியத் தலைவராகச் சில காலம் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில், தவெகவில் இணைவதற்குக் கைமாறாக மீண்டும் தனக்கு வக்ஃபு வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை அவர் முன்வைப்பதாகக் கூறப்படும் நிலையில், தவெக தலைமை இதற்கு இதுவரை எந்தவிதப் பச்சைக்கொடியும் காட்டாமல் மௌனம் காத்து வருவதாகத் தெரிகிறது.
