ஆதரவு கிடையாது.. தவெக அரசுக்கு அதிர்ச்சி…. அதிமுகவின் திடீர் முடிவால் பரபரப்பு….!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்த திருத்தங்களை அப்படியே இடைச்செருகலாகச் சேர்த்ததை அதிமுக ஆதரிக்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் கோரிய திருத்தங்களை முறையாக முன்மொழியாமல், தீர்மானத்தில் நேரடியாக இணைத்து அப்படியே நிறைவேற்றியது சட்டப்படியானது அல்ல என்றும், இவ்வாறு திருத்தப்பட்ட தீர்மானம் உண்மையான அரசினர் தீர்மானம் ஆகாது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசுக்கு இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும், சட்டமன்ற நடைமுறை ரீதியாகவும் ஒரு புதிய சிக்கலையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.