ச்சீ.. கள்ளக்காதல் ரகசியம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில்… பெற்ற மகனையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய தாய்… உ.பி-யில் கொடூரம்…!!

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராம்ராஜ் கிராமத்தில் அங்காத்வீர் என்ற 6 வயது சிறுவன் திடீரென காணாமல் போனான். அச்சிறுவனின் தந்தை துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் நிலையில், சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக அவனது பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு வெள்ளை நிற காரில் வந்த நபர் சிறுவனை அழைத்ததும், அவன் அந்த காரில் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில், அந்த குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவரான அர்பித் பராஷர் என்ற தனியார் வங்கி மேலாளரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில், வங்கி மேலாளர் அர்பித் பராஷருக்கும் சிறுவனின் தாயான குர்பிரீத் கவுருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. குர்பிரீத் கவுரை திருமணம் செய்து கொள்ள அர்பித் திட்டமிட்டிருந்தார். ஆனால், தங்களின் காதலுக்கு இந்த 6 வயது சிறுவன் இடையூறாக இருப்பான் என்று அவர் கருதினார். மேலும், சிறுவன் தங்களை ஒன்றாகப் பார்த்துவிட்டதால், இந்த ரகசியம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், அவனுக்கு புதிய கடிகாரம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி காரில் கடத்திச் சென்று, ஹஸ்தினாபூர் காட்டுப் பகுதியில் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்ததாக அர்பித் ஒப்புக்கொண்டார்.

   

தொடக்கத்தில் இந்த கொலையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறுவனின் தாய் குர்பிரீத் கவுர் மறுத்து வந்த போதிலும், போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகு கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரும் இக்கொலையில் கூட்டுச் சதியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தனது சொந்த 6 வயது மகனைக் கொலை செய்ய கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக தாய் குர்பிரீத் கவுரை மீரட் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காக தாயே மகனைத் தீர்த்துக் கட்டிய இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.