காந்தாரா படத்தின் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ருக்மணி வசந்தின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவரது உருவத்தை ஆட்சேபனைக்குரிய வகையில் சித்தரித்து இந்த போலி ஊடகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவி பேசுபொருளானது.
தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், தனியுரிமையை மீறும் வகையிலும் தீய நோக்கத்துடன் இந்த போலிப் படங்கள் பரப்பப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை ருக்மணி வசந்த், இதுகுறித்து காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். தனது நற்பெயரைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகாரில் வலியுறுத்தியிருந்தார்.
நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், இந்த மார்பிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் முதலில் பதிவிட்டவர்கள் மற்றும் அதனைப் பகிர்ந்தவர்களைக் கண்டறியும் பணியில் சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
