கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.? பிணத்தின் காதில் இருந்த கம்மலைத் திருடிய அரசு மருத்துவமனை ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையில் வெளிமுகமை மூலம் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், மனிதநேயமற்ற முறையில் அந்தப் பிணத்தின் காதிலிருந்து கம்மலை வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளார். இத்தகைய கொடூரமான செயல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/priyarajputlive/status/2067493245769449716/video/1

   

இந்தக் கொடுமை குறித்த தகவல் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. உயிரிழந்தவர்களின் உடலுக்குக்கூட மரியாதை அளிக்காமல், பணத்தாசையோடு செயல்பட்ட அந்தப் பகுதிநேர ஊழியரின் அநாகரிகமான செயல், அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் கண்காணிப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.