உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற பெண், தனது தொழிலதிபர் கணவர் மணீஷ் குப்தாவை (42) தங்களது 6 வயது அப்பாவி மகன் ரியான்ஷ் முன்னிலையிலேயே கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மணீஷ் குப்தா மற்றும் அவரது மனைவி நிஹாரிகா காஷ்யப் ஆகிய இருவரும் எட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்நிலையில், நிஹாரிகாவுக்கு ஏற்பட்ட புதிய கள்ளக்காதலனின் தூண்டுதலின் பேரில், அவர் இந்தத் துணிகரக் கொலையைச் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தன் பெற்றோரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவரையே கள்ளக்காதலனுக்காகத் தீர்த்துக் கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய கான்பூர் காவல்துறையினர், இன்று கொலையாளி நிஹாரிகாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்றோரின் இந்த விபரீத மோதலால், இவர்களது 6 வயது மகன் தற்போது ஆதரவற்று நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
