2 மனைவிகள், 3 பிள்ளைகள் இருக்கும் 45 வயது நபரின் வெறிச்செயல்… 15 வயது சிறுமியை ஏமாற்றி பலமுறை சீரழிக்கப்பட்ட கொடூரம்.. இறுதியில் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on ஆனி 17, 2026

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே திருவிழாவிற்குச் சென்ற 15 வயது பள்ளிச் சிறுமி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அச்சிறுமி கடத்தப்பட்டுத் திருமணம் செய்யப்பட்டுள்ளது போலீசாரின் அதிரடி விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த 13ஆம் தேதி மல்லிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாவிற்குத் தன் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். திருவிழா முடிந்து வீடு திரும்பும் வேளையில் சிறுமி திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக உத்தரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

   

காணாமல் போன சிறுமியின் மொபைல் எண்ணிற்கு அடிக்கடி வந்த அழைப்புகளை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் உத்தரமேரூர் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்த எண் ஆளும்சேரி ஊராட்சி சேந்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவரது 45 வயது மகன் ஜீவா (என்ற ஜீவானந்தம்) என்பவருடையது என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரைத் தேடியபோது அவர் தலைமறைவாகியிருந்தார். தொடர்ந்து அவரது மொபைல் சிக்னலைச் சோதித்தபோது, அவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார், ஒரு அறையில் தங்கியிருந்த ஜீவாவையும், கழுத்தில் தாலியுடன் இருந்த அந்தச் சிறுமியையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

   

போலீசாரின் விசாரணையில், 45 வயதான ஜீவானந்தத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி மற்றும் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இவருக்கு ஏற்கனவே தேவி (36) என்ற முதல் மனைவியும், கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். அதுமட்டுமின்றி, சுமித்ரா என்ற பெண்ணைக் காதலித்து இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது சுமித்ரா நான்கு மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்தச் சூழலில்தான், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயதுச் சிறுமியுடன் ஜீவாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததில் அந்தச் சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி திருவிழாவிற்கு வந்த சிறுமியைத் திட்டமிட்டு அச்சரப்பாக்கத்திற்கு கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் ஜீவானந்தம் கட்டாயத் தாலி கட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, மைனர் சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாயத் திருமணம் செய்த குற்றத்திற்காக ஜீவானந்தத்தின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகள் இருக்கும் நிலையில், 45 வயது நபர் ஒருவர் பள்ளிச் சிறுமியின் வாழ்க்கையைச் சீரழித்த இச்சம்பவம் உத்தரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.