விஜய் போட்ட பலத்த ஸ்கெட்ச்…! சுக்கு நூறாக உடைக்க களமிறங்கிய இபிஎஸ்… 4 எம்.எல்.ஏக்கள் வழக்கில் அதிமுக கொடுத்த ‘மெகா ட்விஸ்ட்’…!!

By Swetha on ஆனி 16, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்தச் சூழலில், மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதனிடையே, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது கட்சித்தாவல் தடைச் சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப் போகச் செய்யும் எனக் கூறி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

   

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் விருப்பப்படியே முன்வந்து ராஜினாமா செய்ததாகவும், இது குறித்து சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டும், இயற்கை நீதிக்கு உட்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் விளக்கமளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைத்தனர்.