“மங்குனி முதல்வர்… எங்கே போனது அந்த பெய்டு இன்ஃப்ளூயன்சர் கூட்டம்…?” – தவெக அரசை கிழித்துத் தொங்கவிட்ட திமுக ஐடி விங்… இணையத்தில் தீயாய் பரவும் பதிவு…!!

By Swetha on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக அரசை திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதே நாளில் பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகக் கேவலமான சட்டம்-ஒழுங்கு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என திமுக ஐடி விங் தனது சமூக வலைதளப் பதிவில் குற்றம் சாட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஏழைப் பெற்றோர்களின் வலியும், பச்சிளம் குழந்தைகளின் வேதனையும் புரியாத ஒரு இரக்கமற்ற நபர் மாநிலத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று அந்தப் பதிவில் சாடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் சேலத்தில் தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் பாலியல் அசிங்கங்களை அரங்கேற்றியபோது, அவர்களைக் கட்சியை விட்டு நீக்காமல் காப்பாற்ற முற்பட்டதன் விளைவே, இன்று கும்மிடிப்பூண்டியிலும் பூந்தமல்லியிலும் பச்சிளம் குழந்தைகள் சீரழிக்கப்படும் உச்சக்கட்ட அவலத்திற்குக் காரணம் என்றும், முதலமைச்சரை ஆட்டுவிக்கும் நிழல் முதல்வர்களுக்கு இக்குற்றங்கள் பற்றி கவலை இல்லை என்பதால் காமக்கொடூரர்கள் பயமின்றித் திரிகிறார்கள் என்றும் திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

   

மேலும், கடந்த தேர்தலின் போது சமூக ஊடகங்களில் “இவர் தான் மாற்றம்” என மக்களை மூலைச்சலவை செய்து, தற்போதைய முதலமைச்சரை அரியணையில் அமர்த்த பணிபுரிந்த பெய்டு இன்ஃப்ளூயன்சர் கூட்டமே இப்போது எங்கே போய் ஒழிந்து கொண்டீர்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 3 வயதுக் குழந்தையின் மரணத்திற்குப் போலி விளம்பரங்களும் ஒரு மிக முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக ஐடி விங், இனியாவது தூங்குவது போல் நடிப்பதை நிறுத்திவிட்டு குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.