பிறப்புறுப்பில் தசை கிழிந்து.. அதிகளவு ரத்தப்போக்கு… 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்…!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் குடியிருப்பு பகுதியில், 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கோரச் சம்பவத்தால் மிகக் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான அக்குழந்தை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டது. எனினும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் பலனின்றி, அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துப் பேசிய தலைமை மருத்துவர் விஜிலா, “குழந்தையின் உடலில் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது என்றும், பிறப்புறுப்பில் தசை கிழிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது” என்றும் மிக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த மிருகத்தனமான கொடூரச் செயலால் நேர்ந்த மரணம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கொதித்தெழச் செய்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.