குஷியோ குஷி..! “இனி நேரடியாக சந்திக்கலாம்” புகார் பெட்டியை வாபஸ் பெற்றது தமிழக அரசு…!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி, பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க வரும் மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சிறப்புப் புகார் பெட்டி வெளியிலேயே அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த முறையால் தங்களால் நேரடியாகச் சென்று அதிகாரிகளிடம் மனுக்களைக் கொடுக்க முடிவதில்லை எனப் பொதுமக்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இதன் காரணமாக, தற்போதைய புதிய நடைமுறை கைவிடப்பட்டு, மீண்டும் பழைய நடைமுறையே அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அனைவரும் இனி எவ்விதத் தடங்கலும் இன்றி நேரடியாகத் தலைமைச் செயலகத்திற்கு உள்ளே சென்று, அங்குள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் தங்களது புகார் மனுக்களை வழக்கம்போல அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.