டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய 200 ஊழியர்கள் சஸ்பெண்ட் … முதலமைச்சர் விஜய் உத்தரவால் அதிரடி நடவடிக்கை..!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

தமிழகத்தில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த புகாரில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 200 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக வசூலிக்கப்படும் இந்த கூடுதல் தொகையைத் தடுக்க, முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். விதிகளை மீறி கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, பொதுமக்கள் இ-மெயில் வாயிலாக அனுப்பிய புகார்களையும் ஆய்வு செய்தனர். இந்தப் புகார்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட 200 ஊழியர்கள் மீதும் தற்போது தீவிரத் துறை ரீதியிலான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.