அம்மா இறந்துட்டாங்க… 4 வயது சிறுவன் சொன்ன வார்த்தை… காரைத் திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… மஹாராஷ்ட்ராவில் பரபரப்பு…!!

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

மஹாராஷ்ட்ரா மாநிலம் பத்லாபூரில் கார் பார்க்கிங் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய 4 வயது சிறுவன், அருகில் இருந்த தன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று “அம்மா இறந்துவிட்டார்” என்று கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அந்த காரை நோக்கி ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அங்கு காருக்குள் அச்சிறுவனின் தாயான மனிஷா போஸ்லே மற்றும் காரின் ஓட்டுநர் இருவரும் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்துபோயினர்.

தகவலறிந்து வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரின் ஓட்டுநர் கணேஷ் ஷிண்டே என்பது தெரியவந்துள்ளது. சிறுவன் அளித்த தகவல்களின் அடிப்படையிலும், சம்பவ இடத்தின் சூழலை வைத்தும், ஓட்டுநர் கணேஷ் முதலில் மனிஷாவைக் கொலை செய்துவிட்டு, பின்னர் அதே ஆயுதத்தால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் பலமாக சந்தேகிக்கின்றனர்.

   

இதற்கிடையில், உயிரிழந்த மனிஷாவின் உறவினர்கள் தங்களுக்கு இந்த ஓட்டுநர் கணேஷை இதற்கு முன்பு யாரென்றே தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் மனிஷாவுக்கும் ஓட்டுநருக்கும் இடையே என்ன மாதிரியான தொடர்பு அல்லது பகை இருந்தது என்பதை அறிய போலீசார் கணேஷின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உண்மைப் பின்னணியைக் கண்டறிய இருவரின் மொபைல் போன் அழைப்புகளும் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.