கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4ஆம் தேதி தான் தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெரிய அளவில் அரசு விடுமுறைகள் எதுவும் இருக்காது என்பதால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், இந்த ஜூன் மாதத்தில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக ஒரு தொடர் விடுமுறை வாய்ப்பு அமைந்துள்ளது.
அதன்படி, வரும் ஜூன் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் ஜூன் 27 நான்காவது சனிக்கிழமை மற்றும் ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களும் இணைந்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இந்தத் தொடர் விடுமுறை காரணமாகப் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுப்பு இருக்கும். இருப்பினும், சில தனியார் பள்ளிகள் ஜூன் 27 சனிக்கிழமையன்று வகுப்புகளை நடத்த வாய்ப்புள்ளது. இந்த எதிர்பாராத 3 நாட்கள் தொடர் விடுமுறை செய்தி பள்ளி மாணவர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
