FLASH: திமுக கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை… ஆர்.எஸ் பாரதி அதிரடி.!!

By Soundarya on ஆனி 11, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், “எங்களுடன் கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை; திமுக தனித்துவிடப்பட்டாலும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் இருந்து இணைந்து பணியாற்றிய இடதுசாரி தோழர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமுகமாகச் சென்று கொண்டிருந்த கூட்டணியில் திடீரென ஒரே நாளில் இடதுசாரிகளுக்கு ஏன் இந்த மன சங்கடம் ஏற்பட்டது என்பது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் இடதுசாரிகளின் திடீர் அதிருப்தி குறித்தும், திமுகவின் இந்தத் தனித்து நிற்கும் துணிச்சலான அறிவிப்பு குறித்தும் அரசியல் வட்டாரங்களில் தற்போது விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.